குஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னையில் வெட்டிக் கொல்லப்பட்ட பதட்டம் விலகுமுன்பே அதே பாணியில் மதுரையில் ஒரு கொலை நடந்துள்ளது. மதுரையை சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலமுருகன் (எ) பாலசுப்பிரமணியனை கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலையில் வாக்கிங் செல்லும்போது ஓட ஓட வெட்டிச் சாய்த் திருக்கிறது ஒரு கும்பல். அப்பகுதியிலிருந்தவர்கள் போலீசுக்கு தகவல் தர, தல்லாகுளம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பிவைத்தனர்.

Advertisment

ntk

இச்செய்தியறிந்த நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான், "மதுரை வடக்கு தொகுதி துணைச்செயலாளராக இருந்த என் அன்புத் தம்பியை படுகொலை செய்தவர்களை உடனடியாகக் கைது செய்யவேண்டும். அரசியல் படுகொலைகள் தமிழகத்தில் தொடர்வதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கமாட்டோம்'' என்று கொந்தளித்துள்ளார்.

கொலை தொடர்பாக விசாரணையில் இறங்கிய காவல்துறை, அடுத்த 12 மணி நேரத்துக்குள் கொலைக்குற்றவாளிகள் 4 பேரை கைது செய்தனர். காவல்துறை விசாரணையில், "மகாலிங்கம் என்பவருக் கும் அவரது தம்பி மருமகன் பாண்டியராஜன் என்பவருக்கும் சொத்துப் பிரச்சினை இருந்து வந்துள்ளது. பாண்டியராஜனுக்கு ஆதரவாக, கொலை செய்யப்பட்ட அவரது சகோதரர் பாலசுப்பிரமணியன் மேற்படி சொத்தினை சமமாகப் பிரித்துத் தருமாறு கேட்டு, மகாலிங்கத்திடம் தொடர்ந்து பிரச்சினை செய்து வந்துள்ளார்.

Advertisment

இந்நிலையில், இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக பாண்டியராஜனின் மகள் பிரியாவை, மகாலிங்கத்தின் மகன் அழகுவிஜய்க்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். அதுவும் பிரச்சனையாகி விவாகரத்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த மார்ச் 2024-ல் பாண்டியராஜனுக்கும் மகாலிங்கத்துக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் மகாலிங்கம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், மகாலிங்கம் சிறையிலிருந்து வந்தவுடன் பாண்டியராஜன் தனது சகோதரர் பால சுப்பிரமணியனை வைத்து, ஏதாவது செய்யத் திட்டமிடு வாரென யோசித்து, அதற்கு முன்பாக மகாலிங்கம், அவரிடம் லோடுமேன்களாக வேலை செய்யும் பரத், நாக இருள்வேல், கோகுல கண்ணன் மற்றும் பென்னி ஆகியோருடன் சேர்ந்து, பாலசுப்பிரமணியனை கொலை செய்துள்ளார். பாலசுப்பிரமணியனை கொலை செய்த அனைத்து எதிரிகளும் உட னடியாகக் கைது செய்யப்பட் டுள்ளனர்.' என்று குறிப்பிட்டுள்ளனர்.

கொலை செய் யப்பட்ட பால சுப்பிரமணியனின் மனைவியோ, " என் கணவரின் தம்பி பாண்டியராஜனின் குடும்பப் பிரச்சனைக் காக என் கணவரைக் கொன்றுவிட்டதாக போலீசார் சொல்வது நம்பும்படியாக இல்லை. கட்சிக்காக தேர்தல் வேலையை இழுத்துப்போட்டு செய்வார். கட்சித் தலைமையிலிருந்து கடைசிவரை போனில்கூட என்னிடம் ஆறுதல் சொல்லவில்லை'' என வருத்தப்பட்டார்.

சென்னையைத் தொடர்ந்து மதுரையும் பதட்டத்தில் உள்ளது.